என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நடிகையர் திலகம்
நீங்கள் தேடியது "நடிகையர் திலகம்"
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தின் தெலுங்கு பதிப்பை பார்த்த இயக்குநர் ராஜமவுலி, தான் துல்கர் சல்மான் ரசிகனாகி விட்டதாக கூறியிருக்கிறார். #NadigaiyarThilagam #KeerthySuresh
மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் இன்று வெளியாகி இருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். சமந்தா பத்திரிகை நிருபராக நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், இன்று படத்தை பார்த்த பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி படக்குழுவை வாழ்த்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
`சாவித்திரியின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் இதுவரை பார்த்திராத வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் பழம்பெரும் நடிகையை மீண்டும் உயிர்பெற்று வர வைத்துள்ளார். துல்கர் சல்மான் அற்புதமாக நடித்துள்ளார். நான் அவரது ரசிகனாகிவிட்டேன். வாழ்த்துக்கள் நாக் அஸ்வின், ஸ்வப்னா, உங்களது நம்பிக்கை மற்றும் உறுதி தலைசிறந்தது'
இவ்வாறு கூறியிருக்கிறார்.
வைஜெயந்தி மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்திருக்கிறார். தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வருகிற 11-ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. NadigaiyarThilagam #Mahanati #KeerthySuresh
Nadigaiyar thilagam Vijay Devarakonda Savithi biopic Keerthy Suresh Samantha Nag Ashwin Kadhal Mannan Gemini Ganeshan Dulquer Salman Prakashraj Mahanati Malavika Nair Shalini Pandey பிரகாஷ்ராஜ் மகாநதி நடிகையர் திலகம் துல்கர் சல்மான் சாவித்ரி வாழ்கை வரலாறு கீர்த்தி சுரேஷ் சமந்தா நாக் அஸ்வின் காதல் மன்னன் ஜெமினி கணேசன் விஜய் தேவரகொண்டா ஷாலினி பாண்டே மாளவிகா நாயர்
×

X